பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 33: மிதிலைக் காட்சிப் படலம் அயினி நீர் சுற்றல் இராமனைக் கண்ட பின் சீதை, காம வேதனையில், நைந்து நொந்து கிடந்தாள். இந்த நோய்க் காரணத்தை அறியாத தோழியரும் செவிலியரும் தாயரும் தமக்கை. முறையுள்ளவரும், சீதைக்குக் கண்னு று (திருஷ்டி) ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சி, கண்னு று கழிக்கும். முயற்சியில் ஈடுபட்டனர், ஒரு கலத்தில தண்ணிரும் உணவுப் பொருளும் இட்டு ஆலத்தி சுற்றினார்களாம், உலகியலில் எளிய ஏழையர் வீடுகளிலும் கண்ணுறு. கழிக்கும் மரபு உண்டு. கண்ணுாறு கழிப்பதற்குப் பல. முறைகள் உள்ளன; அவற்றுள் அயினி நீர் சுற்றுவதும். ஒருமுறை என்பது அறியக் கிடக்கிறது. புள்ளிக் குறி வழி தெரிவதற்காகப் பழங்காலத்தில் புள்ளிக் குறி (புள்ளி அடையாளம்) வைப்பது உண்டு. இருட்டில் வழி தெரிவதற்காக வெள்ளைப் புள்ளிகளை நடு நடுவே. வைப்பதுண்டாம். இரவில் வானத்தில் விண்மீன்கள் புள்ளிக் குறிகள் இட்டது போல் தோன்றுகின்றனவாம். இப்போது கூட, சிலர் அடையாளம் காண எதையாவது, பயன்படுத்திக் கொள்வதுண்டு. பாடல்: "புள்ளிக் குறி இட்டென ஒளி மீன் பூத்த வானம் பொலி கங்குல்' (72). வரலாற்றுப் படலம் கரை ஏறல் உலகியலில் அரிய பெரிய செயல் ஒன்றைக் குறிப்பிடுங்கால், அதைப் பற்றிச் சொல்லிக் கரை ஏற. முடியாது-அதைச் செய்து முடித்துக் கரை ஏறல் அரிது. என்றெல்லாம் கூறுவதுண்டு. விசுவாமித்திரர் சனகனை நோக்கி, தயரதன் பெருமைகளையும் அவன் மக்களின்