பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 35 உலகியல். அயோத்தியிலிருந்து திருமணம் காண மிதிலைக் குச் செல்லும் தயரதனின் படைப்பெருக்கம் உழுந்து விழ இடம் இல்லாமல் இருந்ததாம்.'உழுந்து இட இடம் இலை’ (23) என்பது பாடல் பகுதி. கம்பர் உழுந்தினும் சிறிய எள்ளை விட்டது ஏனோ? இடத்திற்கு இடம் வழக்கில் வேறுபாடு இருக்கலாம். உலாவியல் படலம் நீங்குமின் கும்பலில் பின்னால் இருப்பவர்கள் முன்னால் செல்வ தற்காக, வழியில் உள்ளவர்களை நோக்கி, வழி விடுங்கள் - நகருங்கள்' என்று கூறிக் கொண்டு முந்திச் செல்ல முயல்வது உலகியல். அவ்வாறே, இராமனைக் காண வந்த பெண்டிரும், நீங்குமின்-நீங்குமின் (வழிவிடுங்கள்-வழி விடுங்கள்) என்று சொல்லிக் கொண்டு ஒருவரை ஒருவர் முந்தினராம். பாடல், 'நெருங்கினர் நெருங்கிப்புக்கு நீங்குமின் நீங்குமின் என்று அருங்கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார்' (2) இவ்வாறாக மகளிர் தேனை மொய்க்கும் வண்டுகள் போல் மொய்த்துக் கொண்டனராம். கோலம் காண் படலம் கண் பனி சோரல் தம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கத் தம் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தொடங்கும் போதே, பெண்ணின் பெற்றோரும் உடன் பிறந்தோரும் அழுவது பல இடங்களில் நிகழும். திருமணம் முடிந்தபின் கணவன் வீட்டிற்கு அனுப்பும் போதும் பிரிவாற்றாமல் அழுவதுண்டு. திருமண அரங்கில், மாப்பிள்ளை முதல்முதலாகப் பெண்ணின் கையைப்