பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. பால காண்டப் பிடிப்பதைப் பார்க்கப் பொறாமல் கண் கலங்குபவர்களும் உண்டு. தன் தாய் வீட்டில் உள்ள தமையன் மகனுக்குத் தன் பெண்ணைக் கட்டிக் கொடுத்த தாயும் மகளைப் பிரிய மனமின்றி அழுவதுண்டு, இது உலகியல். இதற்குச் சீதையின் தந்தையாகிய சனக மன்னனும் விதி விலக்கு இல்லை. மன அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சீதை முறைப்படி முதலில் முனிவரை வணங்கி, பின் மன்னன் தயரதனை வணங்கி, பின்னர், கண்களில் நீர் சோர இருக்கின்ற தன் தந்தை சனகன் அருகில் ஓர் இருக்கையில் அமர்ந்தாள். இதைச் சுவைபெறக் கம்பர் பாடியுள்ளார்.

மாதவரை முற்கொள வணங்கி, நெடுமன்னன் பாதமலரைத் தொழுது, கண்கள் பனி சோரும் தாதை அருகு இட்ட தவிசில் தனி இருந்தாள் போதினை வெறுத்து அரசர் பொன்மனை

புகுந்தாள்' (35) இறுதி அடிக்கு, தாமரை மலரை வெறுத்துச் சனக. மன்னன் வீட்டில் வந்து வளரும் திருமகளாகிய சீதைஎனப் பொருள் கொள்ளல் வேண்டும். இந்தப் பாடலில் உள்ள கண் பனி சோரும் தாதை' என்னும் பகுதி உள்ளத்தை நெகிழச் செய்கிறது. கவுதமப் புத்தர் காப்பியம் என்னும் நூலிலும்கண்ணிர் சிந்தும் செய்தி சொல்லப்பட்டுள்ளது. மணமகன் சித்தார்த். தனின் அரண்மனையில் மணப்பெண் யசோதரையைப் பெற்றோர் அழைத்து வந்தனர்; பல வண்டிகளில் சீர் வரிசைகளை ஏற்றி வந்தனர். கிளி போன்ற பெண்ணைப் பிரிய பெற்றோர் மனம் இன்றிக் கண்கள் நீர் முத்தைச் சிந்த, மணமகனது அரண்மனையில் கொண்டு வந்து சேர்த்தனர். பாடல்: