பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 41 தாமரை மொட்டையும், முகம் திங்களையும் நோக்கி எள்ளி நகையாடுகின்றனவாம். மடந்தையரின் உறுப்புகள் அவற்றிற்கு ஒப்புமையாகச் சொல்லப்படும் சிறந்த பொருள் களினும் சிறந்துள்ளன என்பது புதுமைக் கருத்து. பாடல்: 'விதியினை நகுவன அயில் விழி; பிடியின் கதியினை நகுவன அவர் நடை, கமலப் பொதியினை நகுவன புணர் முலை; கலைவாள் மதியினை நகுவன வனிதையர் வதனம்' (44) பிரமன், காசிபன் ஆகியோர்க்கு விதி என்னும் பெயர் உண்டு. பரிபாடல் நூலின் மூன்றாம் பாடலில் உள்ள 8 திதியின் சிறாரும் விதியின் மக்களும்' என்னும் பகுதி யில், விதி என்பதற்குக் காசிபன் என்று பரிமேலழகர் பொருள் கூறியுள்ளார். பிரமன் திலோத்தமையின் விழியைக் கண்டும், காசிபன் மாயையின் விழியைக் கண்டும் மயங்கினார்களாம் இங்கே உள்ள பெண்களின் விழிகளும் அவர்களின் எளிமையை எண்ணி நகுகின்றனவாம். வளர்ந்தும் தேய்ந்தும் குறைபடுகின்ற திங்களைக் கண்டு என்றும் தேயாத முகங்கள் நகுகின்றனவாம். உவமை மாற்றம் : சோலை முகிலையும், நெல் போர் பொன்மலையையும், ஆற்று அணைநீர் கடலையும், கோசல நாட்டு ஊர்கள் தேவர் உலகையும் ஒத்துள்ளன என்று சொல்வதற்குப் பதிலாக, பொன்மலை நெல்போரையும், கடல் அணை நீரை யும், தேவர் உலகம் கோசல நாட்டு ஊர்களையும் ஒத்திருப்பதாகக் கம்பர் உவமை மாற்றம் செய்துள்ளார். A_i ff .– 6\} : காரொடு நிகர்வன கடிபொழில், கழனிப் போரொடு நிகர்வன பொலன்வரை; அணைசூழ் நீரொடு நிகர்வன நிறைகடல்; நிதிசால் ஊரொடு நிகர்வன இமையவர் உலகம்' (46)