பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பால காண்டப் இருவர் உள்ளமும் ஒன்றும்படியாக இராமனும் நோக்கி னானாம்- அதே நேரத்தில் சீதையும் நோக்கினாளாம். இனி, இச்செய்திகள் அடங்கிய செய்யுள்களைக் காண்போம்: 'எண்ணரு நலத்தினாள் இனையள் கின்றுழி கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' (35) நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் இணை ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன விக்கிய கனைகழல் வீரன் செங்கனும் தாக்கணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே (36) 'பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் வரிசிலை அண்ணலும் வாள்கண் நங்கையும் இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்' (37) மருங்கிலா கங்கையும் வசை இல் ஐயனும் ஒருங்கிய இரண்டுடற்கு உயிர் ஒன்று ஆயினர் கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ!' (38) கிகழ்வது தjஇய எச்ச உம்மை: 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' என்னும் கம்பரின் பாடல் பகுதியைக் கொண்டு, ஒரு புது இலக்கணக் குறிப்பு படைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு, எச்ச உம்மைகளைப் பற்றி முதலில் ஆய்வு செய்தல் வேண்டும். முன்பெல்லாம் கூட்டங்களில் பேச்சாளர்களே யன்றித் தலைவர் ஒருவர் இருப்பார். இப்போது முன்னிலை வகிப்பவர்' என ஒருவர் முளைத்துக் கொண்டுள்ளார். மற்றும், வாழ்த்துரையாளர் ஒருவரும் வரவழைக்கப்