பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 51 அவை: (1) ஆறுதல் உரை (சாமம்), கொடை (தானம்), பகைப் பேச்சு (பேதம்), ஒறுப்பு (தண்டம்) என்பன. தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியைத் திங்கள் வருத்து வதாகக் கூறல் இலக்கிய மரபு. அதனால், வருந்தும் தலைவி, திங்களை நோக்கிப் பழித்தும் தாக்கியும் மாறு பாடாகப் பேதமாகப்) பேசுவதுண்டு. சிவப்பிரகாச அடிகளார் பிரபுலிங்க லீலை என்னும் நூலில் பிரபு தேவர் வந்தகதி என்னும் பகுதியில் மாறுபட்டுப் பேசுவதை மிகவும் நயமாகக் கூறியுள்ளார். அல்லமன் என்னும் காதலனை அடைய முடியாத மாயை என்னும் மங்கை திங்களை நோக்கிப் பின்வருமாறு பழிக்கிறாள்: 'கடலிலே திருமகளுடன் பிறந்த திங்களே! நீ முழு உருவத்துடன் (பருவ நிலவாய்த்) தோன்றும் போது உன்னைப் பெற்ற தாயாகிய கடல் பொங்கி அலைமோதித் தலை சாய்கின்றது. நீ தோன்றினால், உன்னுடன் பிறந்த திருமகளின் இருக்கையாகிய தாமரை மலர் குவிந்துவிடச் செய்கிறாய். தேய்கின்ற திங்களே! தாயையும் தமக்கையை யும் இவ்வாறு வருத்தும் நீ, ஒரு தொடர்பும் இல்லாத என்னை என்ன செய்யமாட்டாய்? தக்கன் வேள்வியில் நீ காலில் மிதிபட்டாய். சிவன் தலைமேல் ஏறிக்கொண்டு இறங்காமல் இருக்கலாம். நஞ்சை உனக்கு ஒப்புமையாக யாராயினும் கூறின் அது பொருந் தாது. நஞ்சினும் கொடியை நீ. கழுத்தில் நஞ்சை வைத்த சிவன், உன்னை முடிமேல் வைத்துக் கொண்டது உனது கொடுமையைக் கருதியே. நின் நிலவொளியை அமிழ்த கலை என்று சிலர் கூறுவது காராட்டை வெள்ளாடு எனக் கூறுதல் போன்றதாம்! பாடல்கள்: