பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம்பொழில் 55 மேலும் இராமன் மனம் கலங்கி எண்ணுகிறான். என்னை வருத்தும் அப்பெண் உருவம் எமனாய் இருக்குமோ? அதற்கு, மேகலை அணிந்த அல்குலும் இரண்டு கண்களும் இரண்டு நகில்களும் உயிரை உண்ணும் புன்னகையும் இருக்கின்றனவே. எனது உயிரை வாட்ட இவற்றுள் ஒன்று போதுமே! இத்தனை உறுப்புகள் வேண்டியதில்லையே! வண்ண மேகலைத் தேர்ஒன்று, வாள் நெடுங் கண்ணிரண்டு கதிர்முலை தாமிரண்டு உண்ணவந்த நகையும் என்று ஒன்று உண்டால் எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ?’ (7) கரும்பு வில்லையுடைய மன்மதன் மலர் அம்பு மழையால், எதற்கும் தோற்காத வலிமை உடைய என்னையே வருத்துகிறான் எனில், வலிமை என்பது வேறு யாரிடந்தான் இருக்குமோ! 'கன்னல் வார்சிலை கால்வளைத்தே மதன் பொன்னை முன்னிய பூங்கணை மாரியால் என்னை எய்து தொலைக்கும் என்றால் இனி வன்மை என்னும இது ஆரிடை வைகுமோ? (8) நஞ்சு கருநிறம் உடைய தென்பர். பால் கடலின் வெள்ளம் (நீர்) போல் வெண்மையான ஒளி பரந்திருக்கும் திங்கள், என் உயிரைத் துருவி நஞ்சு போல் கொல்லப் பார்க்கிறது. வெண்ணிற நஞ்சும் உண்டு போலும்! கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல் பள்ள வெள்ளம் எனப் படரும் கிலா உள்ள உள்ள உயிரைத் துருவுமால் வெள்ளை வண்ண விடமும் உண்டாம் கொலோ' (9) கருநிற நஞ்சு போல் வெண்ணிறத் திங்கள் வருத்துவ தால் வெள்ளை நஞ்சும் உண்டு போலும் என வியக்கின்றான்.