பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பால காண்டப் மேலும் இராமன் எண்ணுகிறான். நாம் கண்டு. விரும்புகிற அந்தப் பெண் திருமணம் ஆனவளாக இருப்பாளோ! அங்ங்னமெனில் நமது எண்ணம் தீய தாயிற்றே. இல்லை இல்லை- என் மனம் நல்ல வழி அல்லாத தீய வழியில் என்றுமே சென்றதில்லை-செல்லக் கூடியதும் இல்லை. எனவே, அவள் மணமாகாத கன்னிப் பெண்ணாகத்தான் இருக்கக்கூடும். இதில் ஐயமே இல்லை: 'ஏகும் கல்வழி அல்வழி என் மனம் ஆகுமோ இதற்கு ஆகிய காரணம் பாகுபோல் மொழிப் பைங்தொடி கன்னியே ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!” இந்தப்பாடல்கள் உள்ள படலத்தின் பெயர் கைக்கிளை. இங்கே, கைக்கிளை என்றால், காதலனும் காதலியும் சோல்லாலோ உடலாலோ தொடர்பு கொள்வதற்கு முன், தனித் தனியே தாங்கள் எண்ணி உருகிக் கொண்டிருப்ப தாகும். இந்த அடிப்படையில்தான், சீதையும் இராமனும் தனித் தனியே இரங்கியுள்ளனர். இந்நேரத்தில், இன்பப் பொருள்களாகிய திங்கள், தென்றல், மன்மதனது, செய்கை முதலியவற்றை வெறுத்தும் பழித்தும் பேசுவ, தாகக் கூறுவது இலக்கிய மரபு. அல் ஆழிக்கரை காணல் : இராமன், திருமாலின் பிறவி. ஆயிரம் மணித் தலை 2–60) L-(LI ஆதிசேடனாகிய படுக்கையிலே-பால் கடலிலே இப்போது படுக்காமல், மிதிலையில் துன்பக் கடலிலே படுத்திருக்கிறான். ஆழிப்படையை (சக்கராயுதத்தை)விட்டு. இப்போது வில் படையை வைத்துக் கொண்டுள்ளான் விடியல் காலையில், ஒற்றை ஆழித்தேருடைய ஞாயிறு தன் கதிராகிய கையால் இராமனது அடியைத் தடவித்துயில் எழுப்பினான். இராமன் இரவாகிய கடலின் கரையைக் காண லானான். பாட்டு :