பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பால காண்டப் 'அருந் தவனை அடி வணங்கி, யார் இவர்கள் உரைத்திடுமின் அடிகள் என்ன, விருந்தினர்கள் கின்னுடைய வேள்விகாணிய வந்தார் வில்லும் காண்பார் பெருந்தகைமைத் தயரதன்தன் புதல்வர் என அவர் தகைமை பேச லுற்றான்' (2) இந்தப் பாடலில், இரு கண்களாலும் அழகை மொண்டு பருகுவதாகக் கூறப்பட்டிருப்பது சுவையான பகுதி. அழகில் மிக்கவர்கள் அவர்கள் என்பது கருத்து. அடுத்து வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார்” என்னும் பகுதி மிக்க நயம் செறிந்தது. வில்லை ஒடித்துச் சீதையை மனம்புரியும் ஆற்றல் உண்டு என்பதை முனிவர் குறிப்பாகவும் நயமாகவும் உணர்த்துகின்றார். ஒரு கை பார்ப்பார் என்னும் உலக வழக்கு காண்பார் என்னும் சொல்லில் மறைந்திருக்கிறது. கார்முகப் படலம் குணமும் அழகும் ஒருவர்க்கு அழகு மட்டும் இருந்தால் போதாது. நல்ல குணங்களும் இருத்தல் வேண்டும். அழகு இல்லாவிடினும் நற்குணம் நிறைந்தவர் அழகராகப் போற்றப்படுவார். நற்குணங்கள் அனைத்தும் அழகுடன் சீதைபால் உள்ளனவாம். இதைக் கம்பர் புதுமையான முறையில் கூறுகின்றார். நற்குணங்கள் யாவும் சீதையிடம் தாம் சேர்ந்து பெருமை பெற ஒன்றோடொன்று போட்டியிடு கின்றனவாம். அழகு தவம் செய்து சீதையிடம் சேர்ந்த தாம். விண்ணிலிருந்து கங்கையாறு மண்ணில் வந்ததும் மற்ற ஆறுகள் பெருமை யிழந்தது போல், சீதை தோன்றியதும் மற்ற பெண்கள் பெருமை குறைந்தனராம். பாடல்: