பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*64 பால காண்டப் விசுவாமித்திர முனிவர் காட்டில் தமது வேள்வியைக் காப்பாற்றிய இராமனோடு மிதிலைக்குச் சென்றிருந்த போது இராமன் சனகனது வில்லை நாணேற்றி முறித்தான். முதலிலேயே இராமனைக் கண்டு அவனிடம் தன் உள்ளத்தைச் செலுத்திய சீதை, மிக்க விசையுடன் நாணேற்றி வில்லை ஒடித்த இடி போன்ற ஒலியைக் கேட்டு, இடியேறுண்ட பாம்புபோல் வாட்டம் எய்திப் படுக்கையி லிருந்து எழுந்து, வில்லை ஒடித்தவர் நாம் முன்பு கண்ட இளைஞராக (இராமனாக) இருப்பாரோ-அல்லது வேறு யாராகவாவது இருப்பாரோ என்று மயங்கினாள். பாடல்: "ஆள்வினை முடித்த அருந்தவ முனிவன் வேள்வி போற்றிய இராம னவனொடு மிதிலை மூதூர் எய்திய ஞான்றை மதியுடம் பட்ட மலர்க்கண் சீதை கடுவிசை வில்ஞாண் இடியொலி கேளாக் கேட்ட பாம்பின் வாட்டம் எய்தித் துயிலெழுந்து மயங்கினள் அதாஅன்று மயிலென மகிழ்.. ......" -(புறத்திரட்டு) என்பது பாடல் பகுதி. இந்தப் பாடலும் முழுமையாகத் தரப்படவில்லை. நீலமாலை என்னும் தோழி சீதையின் ஆவலைத் தூண்டிப் பின்னர் இராமன் வில் ஒடித்த செய்தியைச் சீதைக்குத் தெரிவித்ததாகக் கம்பர் பாடியுள்ளார். இந்த ஆசிரியப் பாடலோ, வில் ஒடித்த ஒலியைச் சீதைதானே கேட்டதாகத் தெரிவிக்கிறது. இவ்வாறு சிறுசிறு வேற்றுமையுடன் பல்வேறு இராம காதைகள் இருக்கும் போலும். இந்த ஆசிரியப்பா இராமாயணத்தை (UD. இராகவையங்கார் 'பழைய இராமாயணம்' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆசிரியப் பாவை நோக்கக் கம்பரின் நன்கொடை மிகவும் சுவையான தன்றோ!