பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 7; பருப்பு வகைகளின் குவியல்களும், முத்துப் போல் வெண்மையாயுள்ள அரிசிக் குவியல்களும் மண்டிக் கிடந்தனவாம்: 'பிறைமுகத் தலை பெட்பின் இரும்பு போழ் குறைகறைக் கறிக்குப்பை பருப்பொடு நிறைவெண் முத்தின் நிறத்து அரிக்குவை உறைவ கோட்டம் இல் ஊட்டிடம் தோறுமே” (37) என்பது பாடல். இங்கே காய்கறிக் குவியலைக் குப்பை என்று சொல்லியிருப்பதன் பொருத்தம் என்ன? இதற்கு விடை காணக் குப்பையைக் கிளறவேண்டும்-அதாவது குப்பையின் வரலாற்றைக் கண்டறியவேண்டும்: தொடக்கத்தில், கழிவுப் பொருளாக இருந்த குப்பை போடப்பட்ட இடத்தில் செடி கொடிகள் செழித்து வளர்வதைக் கண்ட மக்கள், குப்பையை வயல்களில் இட்டு விளைச்சலைப் பெருக்கினர். உயிர்காக்கும் உணவுப் பயிர்களைச் செழிக்கச் செய்யும் குப்பை வீடுகளில் விலைக்கு வாங்கிப் போடப்பட்டது. இவ்வாறு குப்பை படிப்படியாக-விலைப் பொருளாக-செல்வமாகக் கருதப் பட்டது. குப்பைக்குச் செல்வ மதிப்பு (பணக்கார அந்தஸ்து) ஏறவே, குப்பைக் குவியல் போன்ற மற்ற பொருள்களின் குவியலும் குப்பை எனப்பட்டன. அதாவது, நெல், வரகு, ஆம்பல், உப்பு, பாக்கு, அகில், சந்தனம், இரத்தினம், பன் மணிகள், பலவகைச் செல்வப்பொருள்கள் முதலிய வற்றின் குவியல்களும் குப்பை எனப்பட்டன. இதற்கு உரிய சில இலக்கியச் சான்றுகளை நூற்பெயர்களுடன் காண்போம்:

  • குப்பை நெல்லின் முத்துறு தந்த”

(புறநானூறு, 2.4-22) *சில்விளை வரகின் புல்லென் குப்பை' (புறம், 327-2)