பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பால காண்டப் இசையில் பாடலாமா? கருத்துக்கு மட்டும் அன்று;பாடலின் யாப்புக்கு ஏற்ற இசையும் இருக்க வேண்டும். அதாவது: வெண் வாவைச் சங்கராபரணம் என்னும் இசையில் பாடல் வேண்டும் என்பது போன்றது இது. 'பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்' (573) என்னும் குறள் ஈண்டு ஒப்பு நோக்கற்பாற்று. ஏதோ ஒரு பொருளும் அதன் நிழலும் போல என ஒப்புமை கூறாமல் பேருந்தொடுநிழல் சென்றன்ன? எனக்கூறியிருப்பதில் உள்ள பொருத்தம் என்ன? கீழே இருக்கும் பொருளின் நிழல் விழுந்து தெரிவதில் வியப்பில்லை. பருந்து மிக்க உயரத்தில் பறக்கும் பறவை. அது எவ்வளவு உயரே பறந் தாலும், அதன் நிழல் கீழே தெரிந்து தொடர்ந்து கொண் டிருப்பது வியப்பாகும். மற்றும், நிலைப் பொருளின் நிழல் தொடர்வதில்லை. ஒரேவிதமாக இருக்கும். மிக்க உயரத் தில் பறக்கும் பருந்தின் நிழல் அதைத் தொடர்ந்து கொண் டிருப்பது எண்ணத் தக்கது. அடுத்தது கேள்வி உணவு. வள்ளுவர் கேள்விச் செல் வத்தைச் செவிக்கு உணவு' என்றே கூறிவிட்டார்.செவிக்கு உணவு இல்லாத போழ்தே சிறிது வயிற்றுக்கும்தரலாமாம் 'செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்” என்பது குறள். (4.12) கம்பரும், உண்ணுதல் என்னும் பொருள் உடைய மாந்து தல்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். கம்பர் மற்றோரிடத்தில் செவி நுகர் கனிகள் என்றும் கூறியுள் ளார். கேள்வியும் கல்வி யாகும்” என்பது திவாகரநிகண்டு நூற்பா. இந்தக் கேள்வி உணவு அமிழ்தினும் (மருந்தினும்) இனியதாம்.