உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

[சொல்லதிகாரம்

 13. மூன்றாம்வேற்றுமை.—இதன் உருபு ஆல், ஆன், ஒடு, ஓடு என்பவையாம், உடன், கொண்டு என்பன சொல்லுருபாக வரும். வினையைக்கொள்ளும்.

உ - ம். வாளால் வெட்டினான் - உருபு.
வாள் கொண்டு வெட்டினான். - சொல்லுருபு.


14. நான்காம் வேற்றுமை.—இதன் உருபு கு என்பதாம். பொருட்டு, நிமித்தம், ஆக என்னும் சொல்லுருபுகளும் வரும், பெயரையுங்கொண்டுமுடியும். வினையையுங்கொண்டுமுடியும். சிலபெயர்கள் கு. உருபு பெறும்போது அதற்முன் உகரச்சாரியை பெறுதலுமுண்டு.

உ - ம்.

கூலிக்குச்செய்தான் - உருபு.
கூலியின் பொருட்டுச் செய்தான் - சொல்லுருபு.
வினை கொண்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/11&oldid=1536294" இலிருந்து மீள்விக்கப்பட்டது