இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பெயரியல்]
9
ஆனவன், ஆனவள், ஆனவர், ஆனது, ஆனவை என்பன சொல்லுருபாக வரும்.
இம்முதல்வேற்றுமை எழுவாய்வேற்றுமையென்றும் சொல்லப்படும். பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் அதற்குப் பயனிலையாய்வரும்.
இயல்பு.
இராமன்வந்தான் - வினைப்பயனிலை.
இராமன் அவன் - பெயர்ப்பயனிலை.
சொல்லுருபு.
இராமனானவன் வந்தான் வினைப்பயனிலை.
இராமனானவன் இவன் பெயர்.
12. இரண்டாம் வேற்றுமை.—இதன் உருபு ஐ ஆகும். அதுவினையைக் கொண்டு முடியும். அதன்பொருள் எழுவாயின்தொழிலை ஏற்பதாகிய செயப்படுபொருளாம். (ஏற்பது - கொள்வது.)
உ-ம். குயவன் குடத்தை வனைந்தான் – இதில், எழுவாயாகிய குயவனது தொழிலாகிய வனைதலைக்கொள்ளுவது குடமாதலால் அது செயப்படுபொருளாதல் அறிக.