இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
[சொல்லதிகாரம்
9. இடப்பொதுப்பெயர்.—எல்லாம் என்பது மூன்றிடத்திற்கும் பொதுவாய் வரும் பெயராம்.
உ-ம். நாமெல்லாம் வந்தோம் - தன்மை
நீங்களெல்லாம் வந்தீர்கள் - முன்னிலை.
அவர்களெல்லாம் வந்தார்கள் - படர்க்கை
10. வேற்றுமை.—வேற்றுமை யென்பது பெயர்ச் சொற்களின் ஈற்றிலே நின்று அப்பெயர்களின்பொருளை வேறுபடுத்துவதாம்.
அது, முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது என எட்டுவகைப்படும்.
11. முதல் வேற்றுமை.— வேறுபாடில்லாத பெயரின் (வேறுபாடில்லாத = சொல்தன்மை மாறாத) இயல்பே முதல்வேற்றுமையாம். சிலபோது