இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பெயரியல்]
7
8. பாற்பொதுப்பெயர்.—உயர்திணையில் தன்மை முன்னிலைப் பெயர்களும் ஆண் பெண் பகுத்தறியக்கூடாத படர்க்கைப் பெயர்களும் உயர்திணைப் பொதுப்பெயர்களாம்.
உ - ம். நான், நீ, ஊமை.
வருமாறு:-
1. நான் இராமனுடைய தகப்பன். நீ இராமனுடைய தமயன். இவைகளில் நான் நீ என்பன ஆணைக் குறிப்பதால் ஆண்பாற் பெயர்.
2. நான் இராமனுடைய தாய். நீ இராமனுடைய தமக்கை. இவைகளில் நான், நீ என்பன பெண்ணைக் குறிப்பதாற் பெண்பாலாகவும் வந்தன.
3. ஊமைவந்தான். இதில் ஊமை என்னும் படர்க்கைப்பெயர், ஆண்பாலாகாவும், ஊமைவந்தாள். இதில், ஊமை என்பது பெண்பாலாகவும் வந்தது.