உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

[சொல்லதிகாரம்


5. ஒன்றன்பாற்பெயர்.—து என்பதை ஈற்றிலுடையவை ஒன்றன்பாற்பெயராம்.

உ-ம். அது.

6.பலவின்பாற்பெயர்.—வை ஈற்றுப்பெயர்களும் பொருந்துமாறு கள் ஈறு பெற்றுவருவனவும் பலவின்பாற் பெயர்களாம்.

உ-ம். அவை, பசுக்கள்.

7. திணைப்பொதுப்பெயர்.—திணைப் பொதுப் பெயராவது, உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய்வரும் பெயராம்.

உ-ம். தாய்.

வருமாறு:—இராமன் தாய் இவள். இதில், தாய் என்பது பெண்ணைக் குறிப்பதால் உயர்திணை. (2) இக்கன்றின் தாய் இது. இதில், தாய் என்பது அஃறிணைப் பொருளாய்ப் பசுவைக் குறிப்பதால் அஃறிணை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/7&oldid=1536157" இலிருந்து மீள்விக்கப்பட்டது