உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

[சொல்லதிகாரம்

அது, ஆது என்பன ஒருமையைக் கொள்ளும்போதும், அ. என்பது பன்மையைக் கொள்ளும் போதும் வரும். உடைய என்பது சொல்லுருபாகவரும். பெயரைக்கொண்டுமுடியும்.

உ - ம்.

        தனதுகை, தனாதுகை -ஒருமை
        தனகைகள் - பன்மை.
        தன்னுடையபசு - சொல்லுருபு.

17. ஏழாம் வேற்றுமை.இதன் உருபு கண், இடம், இல், உள், முதலியவைகளாம். பெயரையும் வினையையுங்கொண்டு முடியும்.

உ - ம். மணியில் ஒளி; பெயர்கொண்டது. ஊரில்இருந்தான்; வினைகொண்டது.

18. எட்டாம்வேற்றுமை.—இதன் உருபு ஏ ஆ முதலியவைகளாம். இது விளி வேற்றுமை யென்றும் சொல்லப்படும் (விளித்தல் = அழைத்தல்) ஏவல் வினையைக்கொண்டு முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/13&oldid=1536293" இலிருந்து மீள்விக்கப்பட்டது