உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலபோதினி.

முதலாவது

சொல்லதிகாரம்.


சொல்லியல்.

1. சொல்.— சொல்லாவது, இருதிணையிலும், ஐந்துபாலிலும் உள்ள பொருள்களை மூன்றிடங்களிலும் நின்று விளக்குவதாம்.

2. திணை.— திணையென்றால் ஜாதி. அது உயர்திணை, அஃறிணையென இருவகைப்படும். உயர்திணை உயர்வாகியஜாதி. அஃறிணை = அல் + திணை,=அல்லாதஜாதி. அதாவது தாழ்ந்த வகுப்பைச்சார்ந்தவை.

3. உயர்திணை.–மக்கள், தேவர், நரகர் உயர்திணையாம். மக்கள் = மனிதர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/2&oldid=1536150" இலிருந்து மீள்விக்கப்பட்டது