இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2
[சொல்லதிகாரம்
4. அஃறிணை.—அம்மக்கள் தேவர் நரகரையல்லாதவை உயிருள்ளவையாயிருந்தாலுமில்லாதவையாயிருந்தாலுமஃறிணையாம்.
5. பால்.—பாலென்பது, மேற்சொல்லிய உயர்திணை அஃறிணைப்பொருள்களின் பகுப்பு. அது ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்துவகைப்படும்.
6. உயர்திணைப்பால்.— ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்றும் உயர்திணைக்குரியவைகளாம்.
உ-ம். அவன் வந்தான் - ஆண்பால்.
அவள் வந்தாள் - பெண்பால்
அவர் வந்தார் - பலர்பால்.
ஒரு ஆணைக்குறித்தால் அது ஆண்பாலென்றும், ஒரு பெண்ணைக்குறித்தால் அது பெண்பாலென்றும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆணையல்லது பெண்ணைக்குறித்தால் அது பலர்பாலென்றுஞ்சொல்லப்படும்.