இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சொல்லியல்]
3
7. அஃறிணைப்பால்.—ஒன்றன்பால், பலவின்பாலென விரண்டும் அஃறிணைக் குரியவைகளாம். அஃறிணையில் ஆண் பெண் என்ற பகுப்பில்லை. ஆணாயிருந்தாலும் அல்லாததாயிருந்தாலும் ஒன்றைக்குறித்தால் ஒன்றன்பாலென்றும், மேற்பட்டவற்றைக் குறித்தாற் பலவின்பாலென்றுஞ் சொல்லப்படும்.
உ - ம். அது வந்தது - ஒன்றன்பால்.
அவை வந்தன - பலவின்பால்.
8. ஒருமை - பன்மை ; எந்தத்திணையிலும் ஒருபொருளைக் குறிப்பது ஒருமையென்றும், மேற்பட்டபொருளைக் குறிப்பது பன்மையென்றும் சொல்லப்படும். ஆண்பால், பெண்பால், ஒன்றன்பாலிம்மூன்றும் ஒருமை. பலர்பால், பலவின்பால் இவ்விரண்டும் பன்மை.