இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
[சொல்லதிகாரம் சொல்லியல்
9. இடம்.—இடமாவது, சொற்கள் நிகழ்கின்ற ஸ்தானம். அது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப்படும்.
சொல்லுபவன் தன்மையிடம்.
உ - ம். நான் வந்தேன்.
கேட்பவன் அதாவது முன்னிற்பவன் முன்னிலையிடம்.
உ - ம். நீ வந்தாய்.
பேசப்படும் பொருள் அதாவது யாரை, அல்லது எதைப்பற்றிப் பேசப்படுகிறதோ அப்பொருள் படர்க்கையிடம்.
உ - ம். அவன் வந்தான்; மரம் வளர்ந்தது.
10. சொற்கள்.—பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனத் தமிழ்ச்சொற்கள் நான்கு வகைப்படும்.