இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22
[சொல்லதிகாரம்
________________
ருள். முடிந்திருக்கும் வினை, முற்றுவினை எனப்படும். முடியாதிருக்கும் வினையாகிய எச்சவினை பெயரைக் கொண்டு முடிந்தால் பெயரச்சம் என்றும் வினையைக்கொண்டு முடிந்தால் வினையெச்சமென்றும் சொல்லப்படும்.
a. பெயரெச்சம்.-- அ, உம் என்ற விகுதிகளைப் பெற்றுப் பெயரைக்கொண்டு முடிவனபெயரெச்சமாம். பெயரெச்சவிகுதிகளுள் அ என்பது நிகழ்கால இறந்தகாலப் பெயரெச்சங்களுக்கும், உம் என்பது எதிர்காலப் பெயரெச்சத்திற்கும் விகுதியாக வரும். உம் என்ற விகுதியே எதிர் காலங்காட்டுமாதலால் அது இருக்கின்ற பெயரெச்சத்திற்கு இடை நிலையிராது.
உ - ம், படித் + அ,படித்த பையன். படிக்கின்று+ அ, படிக்கின்ற பையன்,