இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வினையியல்]
21
உ- ம். படி+ ப் + ஏன் --படிப்பேன்; போவேன்.
படித்தேன், படிக்கிறேன், படிப்பேன் இவ்வுதாரணங்களில் பகுதி, விகுதிகள் ஒரேதன்மையாயிருந்தும் இடை நிலைமட்டும் வேறுபடக் காலமும் வேறுபட்டமையால் இடைநிலை காலங்காட்டும் என்பதறிக.
9. தொழிற்பெயர். - வினைப் பகுதிகளுடன் தல், அல், கை, முதலிய விகுதிகளைச் சேர்த்தால் தொழிற்பெயராம். உ - ம். படி + தல்=படித்தல்; பாடல்; படிக்கை.
சிலசமயங்களில் இறந்தகால நிகழ்கால இடைநிலைகள் சேர்ந்த பகுதியோடு மை என்பது சேர்ந்தும் தொழிற்பெயராகும். உ-ம். படிக்கின்ற +மை=படிக்கின்றமை;
படித்த +மை=படித்தமை.
10. எச்சவினை - எச்சவினை என்றல் முடியாதிருக்கும் வினைஎன்பது பொ