இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20
[சொல்லதிகாரம்
வே நிற்பதாம். இது காதலத்தை யுணர்த்தும். காலம், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று வகைப்படும். (இறந்தகாலம்=முன் போனகாலம்; நிகழ்காலம்=இப்போது நடக்கும்காலம்; எதிர்காலம்=இனிவருங்காலம்.)
a. இறந்தகால இடைநிலை.- த், ட், ற், இன் என்ற நான்கும் இறந்தகால இடை நிலைகளாம். உ - ம். படி + த் + ஏன் = படித்தேன்; கண்டேன்; நின்றேன்; போயினேன்,
b. நிகழ்கால இடைநிலை. - கிறு, கின்று, ஆநின்று என்பன நிகழ்காலத்தைக் காட்டும் இடைநிலைகளாம். உ - ம். படி + கிறு + ஏன் = படிக்கிறேன்; படிக்கின்றேன்; படியாநின்றேன்.
c. எதிர்கால இடைநிலை.- ப். வ். இவ்விரண்டும் எதிர்காலத்தைக் காட்டும் இடைநிலைகளாம்.