இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வினையியல்]
19
a. படர்க்கைவினை விகுதிகள். - அன், ஆன் என்பன ஆணையும், அள், ஆள் என்பன பெண்ணையும் அர், ஆர் என்பன பலரையும், து என்பது ஒன்றனையும், அ என்பது பலவற்றையும் உணர்த்தும் படர்க்கைவினை விகுதிகளாம்.
உ-ம். வந்தனன், வந்தான்; வந்தனள், வந்தாள்; வந்தனர், வந்தார்; வந்தது; வந்தன.
b. தன்மை விகுதிகள். - தன்மைக்கு ஒருமையில் ஏன் என்பதும், பன்மையில் ஓம் என்பதும் விகுதிகளாம்.
உ - ம். வந்தேன்; வந்தோம்.
C.'முன்னிலை விகுதிகள்.-முன்னிலைக்கு ஒருமையில் ஆய்என்பதும், பன்மையில் ஈர், ஈர்கள் என்பனவும் விகுதிகளாம்.
உ.ம். வந்தாய்; வந்தீர், வந்தீர்கள்.
இடைநிலை.- இது, ஒருவினைச் சொல்லில் பகுதிக்கும் விகுதிக்கும் நடு-
2