இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18
[சொல்லதிகாரம்
உ-ம். படித்தான், அடித்தான். இவைகளில் முதலில் நிற்கும் படி, அடி, என்பன பகுதிகளாம்.
இவைகளில் மற்ற உறுப்புக்கள் ஒத்திருந்தும் பகுதிமட்டும் வேறுபடத் தொழில் வேறுபட்டமையால் அப்பகுதிதொழிலை யுணர்த்தும் என்பதறிக.
7. விகுதி.- விகுதியாவது வினைச்சொல்லின் கடைசியில் நிற்பதாம். இதனால் பகுதியாலுணர்த்தப்படும் தொழிலைச்செய்யும் கர்த்தாவின் திணை, பால், இடம் தெரியும்.
உ - ம். படித்தான், படித்தாள். இவைகளில் கடைசியிலிருக்கும் ஆன், ஆள் என்பன விகுதிகளாம். இவைகளில் மற்ற உறுப்புக்கள் இருந்தபடியே இருக்க விகுதிமட்டும் மாறியிருக்கின்றது. விகுதிமாறக் கர்த்தா மாறினமையால் அது கர்த்தாவை யுணர்த்து மென்றறிக.