இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வினையியல்]
17
வினை இயல்.
1. வினைச்சொல். - வினைச்சொல்லாவது ஒரு பொருளினுடைய தொழிலையுணர்த்துவதாம்.
2. அறியக்கூடியபொருள். - வினைச்சொல்லில் தொழில், செய்பவன், காலம் என்ற மூன்று பொருள்களை யறியலாம்.
3. பகுப்பு.-தெரிநிலை, குறிப்பு என வினை இருவகைப்படும்.
4. தெரிநிலை.- தெரிநிலை வினையாவது செயலையும், காலத்தையும், செய்பவனையும் வெளிப்படையாகக் காட்டும் வினையாம்.
5. குறிப்பு. - கர்த்தாவை மட்டும் வெளிப்படையாகக்காட்டி மற்றவைகளைக் குறிப்பாகக் காட்டுவது குறிப்பு வினையாம்.
6. பகுதி. - பகுதியாவது பிரிக்கப்படாததாய் வினைச்சொல்லின் முதலில் நிற்பதாம். இதுதொழிலை யுணர்த்தும்.