இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16
[சொல். பெயரியல்
உ-ம் எருது + ஐ = எருத்து + ஐ = எருத்தை.
இரண்டாவது முதலிய உருபுகளைக் கொள்ளும்போது நான், யான் என்பவை என் எனவும், நாம் என்பது நம் எனவும், யாம் என்பது எம் எனவும், நீ என்பது நின் அல்லது உன் எனவும், நீர் என்பது நும் அல்லது உம் எனவும், தான் என்பது தன் எனவும், தாம் என்பது தம் எனவும் விகாரப்படும்.
உ-ம். யான் + ஐ நாம் + ஐ = நம்மை
நான் + ஐ = என்னை யாம் + ஐ = எம்மை
நீ + ஐ = நின்னை, (அல்லது) உன்னை
நீர் + ஐ = நும்மை (அல்லது) உம்மை
தான் + ஐ = தன்னை, தாம் + ஐ = தம்மை;