இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெயரியல்]
15
உ - ம். எல்லாம் + ஐ=எல்லா + அற்று +ஐ + உம் = எல்லாவற்றையும்.
அவை, இவை, எவை, யாவை என்பவைகள் கடைசி எழுத்துக்கெட்டுப் போய் உருபுக்குமுன் அற்றுச் சாரியைபெறும்.
உ - ம். அவற்றை, இவற்றை, எவற்றை, யாவற்றை.
டு. று. என்பவைகளைக் கடைசியிலுடைய நெடிற் றொடர்க்குற்றியலுகரமொழிகளும், உயிர்த்தொடர்க்குற்றியலுகரமொழிகளும் கடைசியிலுள்ள டகர றகர மெய்கள் இரட்டித்தபின் வேற்றுமையுருபுகளைக் கொள்ளும்.
உ-ம். மாடு + ஐ = மாட்டு + ஐ = மாட்டை
ஆறு + ஐ = ஆற்று + ஐ = ஆற்றை.
எருது என்னும் உயிர்த்தொடரும் சில சமயங்களில் கடைசியிலுள்ள தகரம் இரட்டித்தபின் வேற்றுமையுருபைக்கொள்ளும்.