இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
[சொல்லதிகாரம்
3-வாளால் வாளினால்
4-நோய்க்கு நோயிற்கு
அவனுக்கு - உ பெற்றது
எனக்கு - அ பெற்றது
5-மலையிலிருந்து மலையினிலிருந்து
6-கன்றுடைய கன்றினுடைய
7-வீட்டில் வீட்டினில்
21. மகரத்தைக் கடைசியிலுடைய பெயர்கள் வேற்றுமையுருபுகளைக் கொள்ளும்போது கடைசியிலுள்ள அம் என்றது கெட்டு உருபுக்கு முன் அத்து என்ற சாரியையைக் கொள்ளும்.
உ-ம். நிலம். நில்+அத்து + ஐ = நிலத்தை.
எல்லாம் என்ற பொதுப்பெயர் அஃறிணையைக்குறித்தால் வேற்றுமைப்படுகையில் கடைசியெழுத்துக்கெட்டுப்போய் அற்று என்ற சாரியை பெற்றுப்பின் உருபையும் அதன்பின் உம். என்பதையும் கொள்ளும்.