உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வினையியல்]

17

வினை இயல்.

1. வினைச்சொல். - வினைச்சொல்லாவது ஒரு பொருளினுடைய தொழிலையுணர்த்துவதாம்.

2. அறியக்கூடியபொருள். - வினைச்சொல்லில் தொழில், செய்பவன், காலம் என்ற மூன்று பொருள்களை யறியலாம்.

3. பகுப்பு.-தெரிநிலை, குறிப்பு என வினை இருவகைப்படும்.

4. தெரிநிலை.- தெரிநிலை வினையாவது செயலையும், காலத்தையும், செய்பவனையும் வெளிப்படையாகக் காட்டும் வினையாம்.

5. குறிப்பு. - கர்த்தாவை மட்டும் வெளிப்படையாகக்காட்டி மற்றவைகளைக் குறிப்பாகக் காட்டுவது குறிப்பு வினையாம்.

6. பகுதி. - பகுதியாவது பிரிக்கப்படாததாய் வினைச்சொல்லின் முதலில் நிற்பதாம். இதுதொழிலை யுணர்த்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/18&oldid=1531792" இலிருந்து மீள்விக்கப்பட்டது