உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

[சொல்லதிகாரம்

11. எதிர்மறை விகுதிகள் - பகுதியால் உணர்த்தப்படுகிற தொழிலை மறுக்கிற விகுதிகளுக்கு எதிர்மறை விகுதிகள் என்றுபெயர்.

a. எதிர்மறை வினையெச்சம். --- இதற்கு ஆமல், ஆது என்பன விகுதிகளாக வரும். உ - ம். நடவாமல் இருந்தான்; நடவாது இருந்தான்.

b. எதிர்மறைப் பெயரெச்சம். -- இதற்கு ஆத என்பது விகுதியாக வரும். உ - ம். நடவாதபையன்.

c.எதிர்மறைத் தொழிற்பெயர். - இதற்கு, ஆமை என்பது விகுதியாம். உ - ம். நடவாமை.

12. ஏவல்வினை.--ஏவல்வினையாவது கட்டளைப் பொருளுள்ள முற்றுச்சொல்லாம். இது முன்னிலையிடத்தில்மாத்திரம் வரும். ஆய், தி என்பவை ஏவல் ஒருமைக்கும், உம் முதலிய Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/25&oldid=1536788" இலிருந்து மீள்விக்கப்பட்டது