இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வினையியல்]
25
வை அதன் பன்மைக்கும் விகுதிகளாம். பெரும்பான்மையும் ஒருமையில் விகுதியில்லாமலே வழங்கும்.
உ-ம். உண்ணாய்; செய்தி. ஒருமை, இவை பெரும்பாலும் உண், செய் என்றே வழங்கும். உண்ணும். பன்மை.
13. வியங்கோள். - இது உயர்ந்தோர் தாழ்ந்தோரை ஆசிர்வதிக்கும் பொருளிலும் தாழ்ந்தோர் உயர்ந்தோரை வாழ்த்தும் பொருளிலும் வழங்கும் வினையாம். இது மூன்றிடத்திலும் ஐம்பாலிலும் வரும். இதற்கு க, இ என்பன விகுதிகளாம்.
உ-ம். யான், நீ, அவன், அவள், அவர், அது, அவை.- வாழ்க; வாழி.
14. வினையாலணையும்பெயர். - தொழிலையுணர்த்தும் முற்று வினைகள் அத்தொழிலைச்செய்யும் பொருளையுணர்