இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32
[சொல்லதிகாரம்
| உ-ம். நான் வந்தேன், நீவந்தாய், அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அதுவந்தது, அவை வந்தன. |
---|
9 | ஒருவாக்கியத்தில் எழுவாயும் பயனிலையும் ஒன்றும் பலவுமிருக்கலாம். பயனிலையாகவரும் வினைகளில் கடைசிவினைமாத்திரம் முற்றுவினையாக வரும். |
---|
| உ-ம். இராமனும் கிருஷ்ணனும் வந்தார்கள். பல எழுவாய்கொண்டின. இராமன்வந்துபல பாடங்களைக்கற்றான். பலபயனிலைகொண்டு கடைசிவினை முற்றுவினையாயிருந்தது. |
---|
10 | ஒருவாக்கியத்திற் பலஎழுவாய்களிருந்தால் பயனிலை பன்மையாக இருக்க வேண்டும். அஃறிணையில் சில போது ஒருமையும் இருக்கலாம்.
உ-ம். இராமனும் கிருஷ்ணனும் வந்தார்கள். ஆடுமாடுகள் வந்தன. ஆடுமாடுகள் வந்தது. |
---|