இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாக்கியஇயல்]
31
11. தன்மையிடத்தெழுவாயுடன் முன்னிலை படர்க்கையிடத் தெழுவாய்கள் சேர்ந்துவந்தால் பயனிலை தன்மையிடத்ததாக இருக்கவேண்டும்.
உ - ம். நானும் நீயும் போனோம்; நானும் அவனும் போனோம்;
நானும் நீயும் அவனும் போனோம்
12. முன்னிலையிடத்தெழுவாயுடன் படர்க்கையிடத் தெழுவாய் கூடிவந்தால் பயனிலை முன்னிலையிடத்ததாக இருக்க வேண்டும்.
உ - ம். நீயும் அவனும் போனீர்கள்.
13, உயர் திணை எழுவாயுடன் அஃறிணை கூடி வந்தால் பயனிலை உயர்திணையதாயிருக்கவேண்டும்.
உ - ம், இராமனும் குதிரையும் வந்தார்கள்.