பக்கம்:பாலபோதினி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

இரண்டாவது

எழுத்ததிகாரம்

எழுத்தியல்.

1. எழுத்து.- மொழிக்கு முதற் காரணமாகிய ஒலியே எழுத்தாகும். எவ்வகையான ஒலியால் மொழியாக்கப் பட்டிருக்கின்றதோ அவ்வொலி தான் எழுத்தாகும் என்பதாம். அ இ என்பவை அவ்வொலியைக் குறிப்பிடும்படி ஏற்படுத்தப்பட்ட வரிவடிவங்களாம்.

2. எழுத்தின்வகை. - அவ்வெழுத்துக்கள் முதலெழுத்துக்கள், சார்பெழுத்துக்கள் என இருவகைப்படும்.

முதலெழுத்துக்கள் முதன்மையான எழுத்துக்கள்; சார்பெழுத்துக்கள் அம்முதலெழுத்துக்களைச் சார்ந்தே வரும் எழுத்துக்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/33&oldid=1533934" இலிருந்து மீள்விக்கப்பட்டது