உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

[எழுத்ததிகாரம்

குறில்: குறுகிய ஓசையையுடைய எழுத்துக்கள்.

7. நெட்டெழுத்து. - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ ஔ என்ற ஏழும் நெடில் எனப்படும். இவை ஆ, ஈ, என இயல்பாக வாயினும் ஆகாரம் எனச்சாரியை பெற்றாயினும்வரும்.

நெடில்: நீண்ட ஓசையை யுடையது,

8. சுட்டெழுத்து. - குற்றெழுத்துக்களுள் அ, இ, உ என்ற மூன்றும் சில சமயங்களில் சுட்டுப்பொருளைத் தரும். அப்போது அவ்வெழுத்துக்கள் சுட்டெழுத்துக்கள் எனப்படும்.

சுட்டெழுத்து: குறித்துக் காட்டுதலில் உபயோகப்படும் எழுத்து,

இவ்வெழுத்துக்கள் சுட்டிக்காட்டும்போதி ருப்பதுபோலவே மற்றசமயத்தும் ஒலிப்பதால் வேறெழுத்தாகக் கருதப்படவில்லை. சுட்டுப்பொருளில் வராத போது அவை சுட்டெழுத்துக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/35&oldid=1533936" இலிருந்து மீள்விக்கப்பட்டது