இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எழுத்தியல்]
35
அல்ல. அச்சுட்டு அகச்சுட்டு, பறச்சுட்டு என இரண்டுவகைப்படும். வார்த்தையின் அகத்தேயிருந்து சுட்டினால் அகச்சுட்டு;புறத்தே இருந்து சுட்டினால் புறச்சுட்டு, அகம்= உள்; புறம் = வெளி.
உ - ம். அவன், இவன், உவன்:
இவைகளில் அ,இ, உ, என்பவை வார்த்தையின் அகத்தே இருந்து சுட்டினமையால் அகச்சுட்டெனப்படும்.
அப்புத்தகம், இவ்வீடு, உப்பலகை: இவற்றுள் வரும் சுட்டுகள் புறச்சுட்டுக்களாம். ஏனென்றால் அவைகளில் உள்ள சுட்டுக்களை எடுத்து விட்டாலும் புத்தகம், வீடு, பலகை என்ற வார்த்தைகள் இருக்கின்றன.
9. வினாவெழுத்து - ஆ, எ, ஏ, ஓ, யா என்ற எழுத்துக்கள் சில சமயங்களில் வினாப்பொருளில் வரும்; அப்போது அவற்றுக்கு வினா வெழுத்துக்கள் என்றுபெயர்.