இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36
[எழுத்ததிகாரம்
வினாதல், கேட்டல். கேள்வி கேட்டலில் உபயோகப்படும் எழுத்துக்கள்.
10. மெய்யெழுத்து - க்,ங்,ச்,ஞ், ட், ண், த்,ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற பதினெட்டும் மெய்யெழுத்துக்களாம்.
உயிரின் உதவியில்லாமல் இயங்கமுடியாத உடம்பைப்(மெய்யைப்) போல உயிர் எழுத்தின் உதவியாலேயே சப்திக்கக் கூடிய எழுத்தாதலின் மெய் எனப்பட்டது.
இம்மெய்களின் வடிவம் அறிந்துகொள்ளும் பொருட்டு க்,ங்,எனப் புள்ளி சேர்த்து எழுதப்பட்டிருக்கின்றது. மெய்யெழுத்துக்களுக்குத்
தாமாக ஒலிக்கும் இயல்பில்லை யாதலால் எப்போதும் அகரம்,கரம்,
காரம் என்ற சாரியைகளில் ஒன்றேற்றி க, ங, அல்லது ககரம், ஙகரம் அல்லது ககாரம், ஙகாரம் என்பன போலவே உச்சரிக்க வேண்டும்.