உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

[எழுத்ததிகாரம்


யே எந்த மெய்யும் எந்த உயிரோடும் மயங்கும்.

b.1.உடனிலைமயக்கம்.-க், ச், த், ப் என்ற இந்நான்கு மெய்களும் தம்மொடு தாமே மயங்கும். பிறமெய்களோடு மயங்கா.


உ-ம் கொக்கு ; நீச்சு ; முத்தம்; கப்பம் இவற்றுட் க,ச,த,பக்கள் தம்மொடு தாம் மயங்கியிருத்தல்காண்க


2. பிறநிலைமயக்கம்.-ர், ழ் என்ற இவ்விரண்டு மெய்களும் ஒரு போதும் தம்மொடு தாம் மயங்கா. க்,ச்,த்,ந்,ப்,ம்,வ்,ய்,ஞ் என்ற மெய்களுடனே தான் மயங்கும்.

உ-ம்.தேர்;வீழ். - இவற்றுடன்,கடிது, சிறிது, தீது,நன்று, பெருமை, மாண்பு, வலிது, யாது, ஞான்றது என்பவற்றைச் சேர்க்க


ஆர்ங்கோடு; இதில் ங் என்பதும் மயங்கியிருத்தல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/47&oldid=1469933" இலிருந்து மீள்விக்கப்பட்டது