உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதவியல்]

53

6. விகுதி.- ஒவ்வொரு பகுபதங்களிலும் ஈற்றில் நிற்கும் அன், ஆன், அள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அன், அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும், ஐ, ஆய், இ, மின், இர், ஈர், ஈயர், க, ய, உம் முதலாயின விகுதிகளாம்.

உ -ம். பொன்னன்: இப்பெயர்ச் சொல்லில் அன் என்பதும் நடந்தான்: இவ்வினைச்சொல்லில் ஆன் என்பதும் விகுதிகளாக நின்றன.

a. பண்புப்பெயர் விகுதிகள்.-- மை, ஐ, கு, பு, றி, று, அம், பம், நர், என்பவை பண்புப்பெயர் விகுதிகளாம்.

உ - ம். நன்மை; நன்னர்: இவற்றில் மை, நர் விகுதிகள்.

b. தொழிற்பெயர் விகுதிகள்.- தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, திசி, வி, உள், காடு, பாடு, அரவு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/54&oldid=1469926" இலிருந்து மீள்விக்கப்பட்டது