உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

[எழுத்ததிகாரம்

ப், வ், என்பன எதிர்காலத்தை யுணர்த்தும்.

உ - ம். படிப்பான், வருவான்

செய்யும் என்னும் வினைமுற்று, வியர்கோள் வினைமுற்று, ஏவல் வினை முற்று, செய்யும் என்னும் பெயரெச்சம், இகர யகர வீற்றுச் செய் தென்னும் வினையெச்சம், செய செயின் என்னும் வினையெச்சம் என்ற இவைகளில் விகுதிகளே காலங்காட்டும்.

__________

புணரியல்.

1. புணர்ச்சி: - நிலைமொழியீறும் வருமொழிமுதலும், வேற்றுமை அல்லது அல்வழிப் பொருளில் இயல்பாக அல்லது விகாரப்பட்டுப் புணர்வதற்குப்புணர்ச்சி என்று பெயர்.

நிலைமொழி = முதலில் நிற்கும் மொழி

வருமொழி = அந்நிலைமொழியோடு புணர வரும்மொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/59&oldid=1468887" இலிருந்து மீள்விக்கப்பட்டது