இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62
[எழுத்ததிகாரம்
ரும்போது இடையே யகர வகரங்கள் வந்து அவற்றை உடன்படுத்தும். ஆதலின் யகர வகரங்கள் உடன்படு மெய்கள் என்று சொல்லப்படும். (வரும் உயிர்க்கு உடம்பாக அடுக்கும் மெய் என்று கருதி உடம்படுமெய் என்பதும் உண்டு)
8. இ ஈ ஐ என்ற உயிர்களுக்குப் பின் உயிர் வந்தால் யகரமும், அ ஆ உ ஊ ஒ ஓ ஔ என்ற உயிர்களுக்குப் பின் உயிர்வந்தால் வகரமும் உடன்படு மெய்களாக வரும். ஏகாரத்துக்குப் பின் உயிர்வந்தால் யகர வகரங்களில் எதுவும் உடன்படு மெய்யாக வரலாம். இகரம் சுட்டெழுத்தாக இருந்தால் அப்போது வகரமே உடன்படு மெய்யாக வரும்
உ - ம். கனி + அழகு = கனியழகு யகர முட தீ + அழிக்கும் = தீயழிக்கும் படுமெய்யாக மலை + அடிவாரம் = மலையடிவாரம் || வந்தது