உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புணரியல்]

63



பல+அணி= பலவணி
பலா + இலை = பலாவிலை வகரம் வந்தது
திரு + அடி = திருவடி
பூ + அழகு=பூவழகு
நொ + ஏது = நொவ்வேது
கோ+ அழைத்தான் = கோவழைத்தான்

கௌ+அழகு = கௌவழகு இருமையும் வந்தன சே+அடி=சேயடி

        சேவடி
இ+ அலை. இவ்வலை - வகரம் வந்தது. 

குறிப்பு. தனிக்குற்றுயிர்க்குப் பின் உயிர்வந்தால்

  • பெரும்பாலும் உடன்படுமெய் இரட்டும்.

9. குற்றியலுகரத்துக்குப்பின் உயிர் வந்தால் நிலைமொழியீற்றுகரம்கெடும். சில சமயங்களில் முற்றியலுகரமும் அவ்வாறு கெடும். உ- ம். குரங்கு + ஏறியது = குரங்கேறியது

       குற்றுகரங்கெட்டது. 
       கதவு+ அழகு.= கதவழகு. முற்றுகரங் கெட்டது.

உயிர்க்குப்பின் மெய்வந்து புணர்தல்,

10. உயிருக்குப்பின் மெல்லினமும் இடை-
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/64&oldid=1533947" இலிருந்து மீள்விக்கப்பட்டது