உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

[எழுத்ததிகாரம்


யினமும் வந்தால் இருவழியிலும் இயல்பாகும். ஆயினும் தனி ஐகாரம், நொ, து, என்பவைகளுக்குப் பின்வரும் மெல்லினம் மிகும். உ - ம். விளமாட்சி, விளவலிமை || வேற்றுமை வழியில் மெலிஇடைகள் இயல்பாயின.

        விளமாண்டது விளவலிது || அல்வழியில் அவை இயல்பாயின.
               

11. எகரவினா, முச்சுட்டுக்கள் ஆகிய இவற்றுக்குப் பின் யகரம் வந்தால் வகரம் தோன்றும். மற்றமெய்கள் வந்தால் அவை (வந்தமெய்) இரட்டிக்கும். உ-ம். எவ்யானை - வகரம் தோன்றியது எக்காலம் எந்நாள் மற்ற மெய்கள் இரட்டித்தன எவ்வலி

12. உயிரெழுத்துக்குப் பின் க, ச, த,ப க்கள் வந்தால் பின்வரும் சிறப்பு விதிகளால் விலக்கப்படாதன பெரும்பாலும் இரட்டிக்கும். உ - ம் கடுக்காய், செட்டித்தெரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/65&oldid=1533948" இலிருந்து மீள்விக்கப்பட்டது