உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புணரியல்]

65


13. உயிரீற்றுச் சில மரப்பெயர்களுக்குப் பின் வலி வந்தால் வந்த வல்லினம் அல்லது அதற்கினம் மிகும். சில வேளைகளில் ஈறுகெட்டு அம்முச்சாரியை பெறுதலும் உண்டு. உ - ம். அத்தி + காய் - அத்திக்காய்- வலி மிகுந்தது மா + காய் = மாங்காய் - இனம்மிகுந்தது. புன்கு + காய் = புன்கங்காய் - ஈறு கெட்டு அம்முச்சாரியை பெற்றது.

அகரவீறு.

14. பலவகையான பெயரெச்சங்களீறு, வினைமுற்றின் ஈறு, ஆறாம் வேற்றுமையின் உருபு, அஃறிணைப் பெயரின் ஈறு, அம்ம என்னும் அசைச் சொல்லின் ஈறு ஆகிய அகரங்களின் முன்வரும் வல்லினம் மிகாது.

உ - ம், வந்தகுதிரை; வந்தன குதிரைகள்; தன்கை; பெரியன கண்டேன்; அம்மகொற்றா.

15. பல, சில என்பவை தமக்கு முன் தாம் வந்தால் இயல்பாதலும், மிகுதலும், நிலைமொழியீற்றில் உள்ள அகரங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/66&oldid=1533949" இலிருந்து மீள்விக்கப்பட்டது