இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
66
[எழுத்ததிகாரம்
கெட்டு லகரம் றகரமாகத் திரிதலும் உண்டு. தம்முன் தாம் வராமற் பிற சொற்கள் வந்தால் அகரங்கெடாமலிருந்தாலும் இருக்கும். ,
பலபல ; சிலசில-இயல்பாயின
பலப்பல ; சிலச்சில-மிகுந்தன.
பற்பல ; சிற்சில - அகரங்கெட்டுலகரம் றகரமாகத் திரிந்தன
பல்பொருள்; பலபொருள் - அகரம் கெட்டும் கெடாமலும் இருந்தன.
ஆகாரவீறு. 16. ஆ, யா என்னும் வினாக்களும், ஆ, மா என்னும் பெயர்களும், வினைமுற்றீற்றாகாரங்களும் ஆகியவைகளுக்குப்பின் வல்லினம் வந்தால் இயல்பாம். உ - ம். அவனாசெய்தான் ; யாபெரிய; ஆபெரிது; மாபெரிது; உண்ணாகுதிரைகள்.
17. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ஆகாரம் இயல்பாதலும், குறுகுதலும் அதனோடு உகரம்பெறுதலும் உண்டு.