இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புணரியல்]
67
உ - ம் நிலாப்பெரிது - இயல்பு
நிலவழகு- குறுகியது
நிலவுவீசியது - குறுகி உகரமும் பெற்றது;
ஐகாரவீறு. 18. ஐகாரவீற்றின் முன் வல்லினம் வந்தால் சிலபோது ஈறுகெட்டு அம்முச்சாரியை பெறுதலும், சிலபோது ஈறுகெடாமல் அம்முச்சாரியை பெறுதலும் உண்டு. இவ்விரண்டுமின்றி வந்த வல்லினமே மிகுதலும் உண்டு. உ - ம். எலுமிச்சை + காய். எலுமிச்சங்காய் - ஈறுகெட்டு அம்பெற்றது. புன்னை + கானல். புன்னையங்கானல். ஈறு கெடாமல் அம்பெற்றது. புன்னைக்கானல் - இருமையுமின்றி வலிமிக்கது. வழுதுணை, தாழை, தில்லை, பாவட்டை முதலியவற்றுக்கும் இவ்விதியே
19. பனை என்ற சொல்லின்முன் கொடி என்ற சொல்வரின் மிகலும், வலிவரின் ஐகெட்டு அம்மும், திரள் என்ற சொல்வரின் முன்சொன்ன இருவிதியும் கொள்ளுதலும், அட்டு என்-