பக்கம்:பாலபோதினி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

[எழுத்ததிகாரம்

 பது வரின் ஈறுகெட்டு வருமொழி முதல் நீளுதலும் விதியாம்.

உ - ம், பனைக்கொடி: மிகுந்தது.

பனங்காய் ஐகெட்டு அம்பெற்றது. பனந்திரள், பனைத்திரள்; இருவிதியும் ஏற்றது. பனாட்டு; ஈறுகெட்டு வருமொழிமுதல் நீண்டது.

இகரவீறு.

20. சுவைப்பொருளில் வரும் புளி என்ற சொல்லின் முன்வரும் வல்லினம் மிகும் அல்லது அவ்வல்லினத்துக்கினமாகிய மெல்லினம் தோன்றும்.

உ - ம். புளிச்சோறு; புளிஞ்சோறு.

உகரவீறு.

21. முற்றுகரவீறு - ஒடு, அது என்னும் உருபுகளுக்கும், ஒரு, இரு, அறு, எழு என்னும் விகாரப்பட்ட எண்ணுப்பெயர்கட்கும், வினைத் தொகைளுக்கும் அது, இது, உது என்னும் சுட்டு பெயர்கட்கும், எது என்னும் வினாப்பெயருக்கும் ஈற்றில் உள்ள உகரங்களின்முன் வலிவந்தால் இயல்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/69&oldid=1533944" இலிருந்து மீள்விக்கப்பட்டது